பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரதமர் உறுதியான முடிவை எடுத்துள்ளார்... தேவகவுடா!
May 6, 2025, 10:31 IST
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏப்ரல் 22ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிராக பல்வேறு விதமான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து தேவகவுடா பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரதமர் உறுதியான முடிவை எடுத்துள்ளார். எந்த நடவடிக்கையும் எடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார்.

கடினமான நடவடிக்கைகளை எடுத்ததற்காக பிரதமரை நான் வாழ்த்துகிறேன். பயங்கரவாதத்தை ஒழிக்க பிரதமர் மோடி எத்தகைய நடவடிக்கைகளை எடுத்தாலும் அதற்கு எங்கள் ஆதரவு உண்டு எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
