பொதுமக்கள் அதிர்ச்சி... மெரினா கடற்கரை செல்ல கட்டணம்?

 
மெரினா
 


 தமிழகத்தின் தலைநகர் சென்னையில் சுற்றுலாத் தலங்களில் அனைவராலும் விரும்பப்படுவது பீச் தான். இந்நிலையில் மெரினாவுக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன்  நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மெரினா கடற்கரை பார்க்கிங்

சென்னை மெரினா கடற்கரை தலைநகரின் முக்கியமான அடையாளம். வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்கள் எல்லாம் மெரினாவைப் பார்க்காமல் செல்வதில்லை. சென்னை மக்களுக்கு மட்டுமல்லாமல், சென்னைக்கு வருகிறவர்களுக்கு சுற்றுலாத் தளமாகவும் இளைப்பாறும் இடமாகவும் மெரினா கடற்கரை திகழ்கிறது.
மெரினா கடற்கரையில் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கடல் அலைகளைப் பார்த்து கடற்கரையில் காற்று வாங்கி மகிழ்கின்றனர். மிக நீளமான அழகான கடற்கரையான மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வந்து செல்ல கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

மெரினா
இந்நிலையில்தான், சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் அருகே உள்ள ஒரு சிறிய பகுதிக்கு, பொதுமக்கள் இனி கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற புதிய விதி விரைவில் அமலாக இருப்பதாக  சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புக்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.  
இந்நிலையில், மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. நீல கொடி கடற்கரை திட்டம் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web