ரீல்ஸ் மோகத்தால் உசிரே போயிடுச்சு... நதியில் வீடியோ எடுத்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சிறுமிகள் நீரில் மூழ்கி பலி !
ரீல்ஸ் மோகத்தில் எடுக்கப்படும் வீடியோக்களால் பல நேரங்களில் இளசுகள் விபரீதங்களில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதன்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சிறுமிகள் யமுனை நதியில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் 6 பேரும் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக இருவரும் விரைந்து வந்து சிறுமிகளின் சடலங்களை மீட்டனர். உயிரிழந்த சிறுமிகளின் உடல்களை பார்த்து குடும்பத்தினரும் கிராம மக்களும் கதறித் துடித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு சிறுமிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
