நாட்டையே உலுக்கிய மோசடி... போலி மருந்து தொழிற்சாலைக்கு 'சீல்'!... ரூ.500 கோடி மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல்!

 
போலி மருந்து மாத்திரை தொழிற்சாலை சீல்

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட பிரபலமான 'சன் பார்மசி' என்ற நிறுவனத்தின் பெயரில், புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் போலி மாத்திரைகள் தயாரித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில், ரூ.500 கோடி மதிப்பிலான மாத்திரைகள் மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புதுவையில் போலி மாத்திரைகள் தயாரிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில், சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

மாத்திரை மருந்து

முதற்கட்டமாக, ரெட்டியார்பாளையத்தில் வசித்து வரும் ராஜா என்பவருக்குச் சொந்தமான 'ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ்' தொழிற்சாலைக்குச் சீல் வைக்கப்பட்டது. அங்கு மட்டும் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான போலி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ராஜாவுக்கு உதவியாக இருந்த ராணா, மெய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின்படி, திருபுவனை பாளையத்தில் செயல்பட்டு வந்த 'லார்வன்' மருந்துத் தொழிற்சாலையில் புதுச்சேரி மருந்து தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் சிபிசிஐடி காவல்துறையினர் அடுத்தடுத்து இரு நாட்கள் சோதனை நடத்தினர்.

இலங்கைக்கு மருந்து கடத்தல்

இந்தச் சோதனையில், 36 அறைகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட நோய்களுக்கான போலி மாத்திரைகள், மருந்து உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த 2 நாட்களாக நடந்த சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட போலி மாத்திரைகள் மற்றும் மூலப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.500 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தத் தொழிற்சாலைக்கும் சீல் வைக்கப்பட்டது.

இந்த மிகப் பெரிய போலி மருந்து மோசடி குறித்து விசாரணை நடத்த, விரைவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதுச்சேரிக்கு வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!