தமிழகத்தில் ஜனவரி 19ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் இந்த திட்டம் அமல்!

 
சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!

தமிழகத்தில் ஜனவரி 19ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம் அமலுக்கு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் இனி காலி பாட்டில்களை ஒப்படைத்து ரூ.10 திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனும் திட்டத்தை இம்மாதம் 19ம் தேதி அமுல்படுத்தப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்திலும், திண்டுக்கல் மாவட்டத்திலும் மலை பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில், சுற்றுலாவுக்கு வருபவர்களில் பலரும் பொது இடங்களில் காலி மதுபாட்டில்களை வீசி விட்டும், உடைத்து விட்டும் செல்கின்றனர். வனப் பகுதிகளிலும் இவ்வாறு பலரும் பாட்டில்களை உடைத்துப் போட்டு செல்வதால், வனவிலங்குகளும் உயிரிழக்கின்றன. இவ்வாறு வீசிச் செல்லப்படும் காலி மதுபான பாட்டில்களால் இயற்கை சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடைமுறைபடுத்த உத்திரவிட்டது.இந்த திட்டம் நீலகிரியில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது.

கிங்பிஸ்ஸர் பீர் சரக்கு டாஸ்மாக்

பிற மாவட்டங்களிலும் இத்திட்டத்தை  அமல்படுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்ததையடுத்து கோவை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெறப்படும் எனவும், இதற்கான ஸ்டிக்கர் மது பாட்டிலிலேயே ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி மதுபான பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து 10 ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்

தமிழகத்தில் ஜனவரி 19ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. திருவாரூர், நாகை, குமரி, தேனி, தருமபுரி ஆகிய மாவட்ட டாஸ்மாக் கடைகளில், மதுபான விலையுடன் கூடுதலாக ரூ.10 பெற்றுக்கொள்ளப்படும். காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மீண்டும் ஒப்படைத்து, கூடுதலாக கொடுத்த ரூ.10ஐ பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பாக டாஸ்மாக் பணியாளர்களுக்கு உத்தரவு பறந்துள்ளது. 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web