ஸ்கூட்டர் விலை ரூ.1 லட்சம்... ஆனா நம்பர் ப்ளேட் 14 லட்சம்... பகீர் கிளப்பிய இளைஞர்!

ஸ்கூட்டர் விலை ரூ.1 லட்சம் தான், ஆனால் ஸ்கூட்டருக்கு நான் வாங்கி வைத்திருக்கும் நம்பர் ப்ளேட் விலை 14 லட்சம் ரூபாய் என்று அதிர்ச்சியளிக்கிறார் இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்.
இமாச்சலப் பிரதேசத்தில் வசித்து வருபவர் சஞ்சீவ் குமார். இவர் சமீபத்தில் புதிய ஸ்கூட்டி ஒன்றை வாங்கினார். அதற்கு விஐபி எண்ணை பதிவெண்ணாக பெற விரும்பினார். அதனால் போக்குவரத்து துறைக்கு விஐபி எண்ணை பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் போக்குவரத்து துறை ஆன்லைன் ஏலத்தில் அதிகபட்சமாக ரூபாய் 14 லட்சத்திற்கு HP21C-0001 என்ற பேன்சி நம்பரை அறிவித்தது.
அந்த ஏலத்தில் இருவர் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஏலத்தின் முழு தொகையும் மாநில அரசின் வருவாயாக நேரடியாக டெபாசிட் செய்யப்படுவதாக போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுவே மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு வழங்கப்பட்ட மிக விலையுயர்ந்த விஐபி பதிவு எண் எனவும் கூறியுள்ளனர். அதனை பணம் செலுத்தி சஞ்சீவ் வாங்கியுள்ளார்.
இது குறித்து ஸ்கூட்டி உரிமையாளர் சஞ்சீவ் “ எனக்கு சிறப்பான தனித்துவமான எண்களை சேகரிப்பதில் ஆர்வம் அதிகம். எனவே எனது ஸ்கூட்டருக்கு விஐபி நம்பரை பெற விரும்பினேன். மேலும் எனது ஆர்வத்திற்கு விலையே இல்லை. ஏதாவது சிறப்பான ஒன்றை பெற வேண்டும் என நினைத்தால் அதற்கான விலையை பற்றி கவலைப்படக்கூடாது எனக் கூறியுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!