திருச்செந்தூரில் கடல் 50 அடிக்கு உள்வாங்கியது!

 
திருச்செந்தூர்


நேற்று சித்ரா பெளர்ணமி தினத்தையொட்டி பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் அருகே கடல்நீர் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கி காணப்பட்டது. 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. பின்னர் 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாரதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. 

கடல் சீற்றம் காரணமாக திருச்செந்தூர் கடலில் குளிக்க போலீசார் தடை

சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பள்ளி தொடர் விடுமுறை என்பதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் திரளான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் முருகன்

இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே கடல்நீர் அமாவாசை, பௌர்ணமி நாள்களில் கடல்நீர் உள்வாங்குவதும் பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் அண்மைக்காலமாக தொடர்ந்து நிகழ்கிறது.இந்நிலையில் நேற்று, சுமார் 50 அடிக்கு கடல்நீர் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாசி படர்ந்த பாறைகள். எனினும், பக்தர்கள் வழக்கம்போல நீராடினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது