குற்றாலத்தில் சீசன் களைக்கட்டியது... பொதுமக்கள் குளிக்க அனுமதி!

 
குற்றாலம்

கடந்த சில நாட்களாகக் கனமழை காரணமாகக் குற்றால அருவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மழை சற்று குறைந்ததால், அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலை பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதன் எதிரொலியாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி என அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.

குற்றாலம்

குறிப்பாக, கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், ஐயப்பன் கோவில் விரதத்தை மேற்கொண்டு மாலை அணிந்துள்ள பக்தர்கள், குற்றாலம் வந்து புனித நீராடிச் செல்வது வழக்கம். இதனால் இந்தக் காலகட்டத்தில் குற்றால அருவிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இதற்கிடையே, கடந்த சில நாட்களாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அபாயகரமான அளவுக்கு அதிகரித்தது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் குளிக்க கடந்த 3 நாட்களாகத் தடை விதிக்கப்பட்டது. இதனால் குளிக்க வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

குற்றாலம் ஐந்தருவி

இந்நிலையில், இன்று நவம்பர் 22ம் தேதி காலை முதல் மழை சற்று குறைந்த நிலையில், அருவிகளுக்கு வரும் நீர்வரத்து சீரான அளவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டினாலும், குளிப்பதற்கு உகந்த நிலை வந்ததால், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதையடுத்து, குற்றால அருவிகளில் குளிக்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சபரிமலை சீசன் தீவிரமடைந்துள்ளதால், அருவிகளில் குளிக்க அனுமதி கிடைத்திருப்பது ஐயப்ப பக்தர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்திருப்பதால், குற்றாலப் பகுதியில் தற்போது சீசன் களைக்கட்டியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!