பரம ரகசியம் ... அதை கேட்ககூடாது... ஓபிஎஸ் தடாலடி!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கல்லூரி மாணவர்களின் சுற்றுலாப் பேருந்து விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த மாணவர்களை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பி.எஸ், “மக்கள் பாஜக மீது வைத்துள்ள நம்பிக்கையால் தான் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. ஓபிஎஸ் பதவிக்காக எந்த இலக்கும் செல்லக்கூடியவர் என தன்னிடம் ஜெயலலிதா கூறியதாக ஆர்.பி.உதயகுமார் கூறுகிறார்.
ஆர்பி உதயகுமாரிடம் ஜெயலலிதா பேசவில்லை. வெற்றிக்கான ரகசியம் உள்ளது, அதிமுகவில் இருப்பவர்கள் தொலைபேசியில் பேசுவது ரகசியம் என ஏற்கனவே கூறிவிட்டேன். அதை தற்போது கூற முடியாது. அது பரம ரகசியம்னு சொல்லிட்டேன், அதை கேட்கக்கூடாது” எனக் கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!