பள்ளியில் திடீர் துப்பாக்கி சூடு!! ஒரு மாணவி பலி!! 5 மாணவிகள் கவலைக்கிடம்!!

 
பள்ளி

பாகிஸ்தானில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கப்படுகிறது. எனினும் பெண்கள் கல்வி கற்பதை பாகிஸ்தானியர்கள் ஊக்குவிப்பது இல்லை. இது தொடர்பான விவாதம் மிகநீண்டவை.இந்த நிலையில், அங்குள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள பெண்கள் பள்ளி மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல்கள் இருந்தது. இதனால் அந்த பள்ளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.

பள்ளி

இந்நிலையில் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் அதிகாரி ஆலம் கான், பள்ளியில் இருந்து வெளியேறிய பள்ளி பேருந்தின் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 8 வயது சிறுமி கொல்லப்பட்ட நிலையில், நான்கு மாணவர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த எதிர்பாராத சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் அதிகாரி ஆலம் கான் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.  துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மூத்த அதிகாரி நசீர் சத்தி கூறுகையில், ஆலம் கான் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என தெரியவில்லை, ஆனால் இது தீவிரவாத தாக்குதல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பள்ளி

ஸ்வாட் பள்ளத்தாக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் தாலிபான்களின் கோட்டையாக திகழ்ந்தது. கடந்த 2019 ஆண்டு பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பிறகு சம்பந்தப்பட்ட பகுதி தீவிரவாத குழுக்களிடம் இருந்து விடுவிக்கப்பட்டது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web