வேட்பாளர் தேர்வு தீவிரம்.. இன்று தவெக மாவட்டச் செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத் விவாதிக்க இன்று விஜய் மாவட்ட நிர்வாகிகளுடன் 'ஜூம்' (Zoom) மீட்டிங்கில் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று மாலை நடைபெறும் இந்தக் காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் நேரடியாக மாவட்டச் செயலாளர்களுடன் உரையாற்றுகிறார்: இதுவரை பெறப்பட்ட விருப்ப மனுக்களின் எண்ணிக்கை மற்றும் விண்ணப்பித்தவர்களின் பின்னணி குறித்துக் கேட்டறிய உள்ளார்.

ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படும். ஏற்கனவே அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர் குழுக்களின் தற்போதைய களப்பணி குறித்து விஜய் ஆய்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தனது கட்சியினருக்கு வழங்கியுள்ள 'திடீர்' கட்டளைகளில், மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைக்கும் பெயர்களைத் தவிர்த்து, ஒரு தனியார் நிறுவனம் மூலம் விஜய் ரகசியமாகத் தொகுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறார். அந்த முடிவுகளையும் இந்த ஆலோசனையின் போது ஒப்பிட்டுப் பார்க்க வாய்ப்புள்ளது. கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் 'விசில்' சின்னத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் உள்ள சவால்கள் குறித்து ஆலோசிக்கப்படும்.

பிப்ரவரி 13ல் சேலத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு முன்பாக, மாவட்ட ரீதியாக நிலவும் சாதக பாதகங்களை அறிந்துகொள்ளவே விஜய் இந்தத் திடீர் ஆலோசனையை மேற்கொள்கிறார். இதில் 234 தொகுதிகளின் மாவட்டச் செயலாளர்களும் கட்டாயம் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
