எஸ்.ஐ.ஆர் வழக்கு... மம்தா பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதம்!

 
மம்தா
 

மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியைச் சுற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நேரடியாக ஆஜராகி தனது தரப்பில் வாதிட்டார். வாக்காளர் பட்டியலில் பல பிழைகள் உள்ளதாகவும், சிலரின் பெயர்கள் தவறாக நீக்கப்படுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தேர்தல் ஆணையம் மாநில அரசின் ஆவணங்களை பெற மறுக்கிறது என்றும், இதனால் பல வாக்காளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மம்தா தெரிவித்தார். தேர்தல் செயல்முறை நேர்மையாக நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனால் மக்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்த வாக்காளரும் தவறாமல் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டை தெரிவித்தனர். மேலும் தேர்தல் ஆணையம் இந்த வழக்குக்கு இரண்டு நாட்களில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரம் மேற்கு வங்காள அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!