வெட்டுப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்த மகன்.. அதிர்ச்சியில் உயிரை விட்ட தாய்!
மகன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு, அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் தாய் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பேளுக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியைச் சேர்ந்தவர் கதிரவன் (42). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று இரவு தனது நண்பர்களுடன் ஊர் பொது இடத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தான் மறைத்து வைத்திருந்த கோடாரியால் கதிரவனின் கழுத்தில் திடீரென வெட்டியுள்ளான். இதில் கதிரவன் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்தார்.

இது குறித்து தகவல் அறிந்து பதறியடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு ஓடிவந்தார் கதிரவனின் தாயார் ஜானகி (65). தனது மகன் கழுத்தில் வெட்டுப்பட்டு, ரத்த சகதியில் மரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்த ஜானகி, "ஐயோ மகனே" எனக் கதறி அழுது அங்கேயே மயங்கி விழுந்தார். ஜானகியை உடனடியாக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த கதிரவன் தற்போது நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதலில் ஈடுபட்ட அந்தச் சிறுவனைப் பிடித்துப் பேளுக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் இடையே இருந்த முன்விரோதம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
