விட்டுப் பிரிந்த மனைவி... தந்தையை துரத்தி துரத்தி துப்பாக்கியால் சுட முயன்ற மகன்..!

 
துப்பாக்கி

மனைவி, தன்னை விட்டுப் பிரிந்து சென்றதற்கு தனது தந்தையின் பேச்சு தான் காரணம் என்று கருதிய மகன், மன அழுத்தத்தில், தந்தையைத் துரத்தி துரத்தி சுட முயன்ற சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேம்பதேவன்காடு பகுதியில் வசித்து வருபவர்கள் கருணாநிதி(45) - புனிதா தம்பதியர்.  கணவர்- மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட பிரச்சனையால் புனிதா கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். மனைவி புனிதா பிரிந்து சென்றதற்கு, தனது தந்தை பன்னீா்செல்வம் (65) தான் காரணம் என கருணாநிதி எண்ணியுள்ளார். இதனால் அவர் தந்தையிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

புனிதா

இந்நிலையில், மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கருணாநிதி தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த கருணாநிதி, முறையான அனுமதியில்லாமல் தான் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியால் தனது தந்தை என்றும் பாராமல் பன்னீர்செல்வத்தை நோக்கி சுட்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார்.

அப்போது துப்பாக்கி குண்டுகள் குறிதவறி அருகில் இருந்த தண்ணீர் டேங்கில் பாய்ந்தது. இதனால் அதிர்ஷ்டவசமாக பன்னீர்செல்வம் உயிர் தப்பினார். இதையடுத்து, அங்கிருந்து தப்பித்து இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் பன்னீர்செல்வம் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை கைது செய்தனர்.

புனிதா

மேலும், கள்ளத் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப தகராறில் தந்தையை மகன் கள்ளத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web