தந்தையின் உடலை புதைக்க கிராம மக்கள் காலில் விழுந்த மகன்!! தொடரும் அவலங்கள்!!

 
லிகோரியா

தேனி மாவட்டம் கோட்டூரில் உள்ள ஆர்சி தெருவைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர். இவருக்கு லிகோரியா என்ற மனைவியும் அருளானந்தம், அமல்ராயன், ஆரோன், ஆமேஸ் என நான்கு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் அருளானந்தம் (33) ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். 

ஜான் பீட்டரின் இளைய மகன் ஆரூண், இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதன் காரணமாக ஜான் பீட்டர் அவரை குடும்பத்தைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளார். இந்த நிலையில், ஜான் பீட்டர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். 

அவரது உடலை அங்குள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க கூடாது என்று கூறி குறிப்பிட்ட கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்லறை தோட்டத்தை பூட்டியுள்னர். அது மட்டுமல்லாமல் அனைவரது காலில் விழுந்து மன்னிப்பு, கேட்க வேண்டும் என கூறியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

லிகோரியா

கோட்டூரில் நடந்துள்ள இந்த சம்பவம் பலருக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. மகன் மதம் மாறியதால் அவரை ஒதுக்கி வைத்த ஜான் பீட்டர், உயிரிழந்த பின்னர் இன்று தனது மதத்தை சேர்ந்தவர்களாலேயே ஒதுக்கப்பட்டுள்ளது மனிதம் மரணித்து விட்டது என்பதை காட்டுகிறது. 

இதனிடையே, ஊர் பெரியவர்களின் முன்னிலையில் ஜான் பீட்டரின் குடும்பத்தினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உடலை அடக்கம் செய்ய அனுமதிப்போம் என ஊர் மக்கள் கூறுவதாக ஜான் பீட்டர் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதனால் உயிரிழந்த ஜான் பீட்டர் இன் உடலை அடக்கம் செய்யாமல் ஒரு நாள் முழுவதும் வீட்டிலேயே வைத்திருந்தனர்.

லிகோரியா

பின்னர் இது குறித்து தகவலறிந்த போலீசார் அந்த ஊருக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் அவரது உடல் கோட்டூர் மயானத்தில் கிறிஸ்தவர்களின் முறைப்படி புதைக்கப்பட்டது. மதம் மாறி திருமணம் செய்ததால் இறந்தவரின் உடலை புதைக்க விடாமல் செய்த சம்பவம் தேனியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதம்மாறி திருமணம் செய்ததால் எதிர்ப்பு தெரிவித்து காலில் விழவேண்டும் என கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web