செம.. பாரம்பரியத்தை காக்க.. மணமகளை ரேக்ளா வண்டியில் அழைத்து வந்த மணமகன்!

 
ரம்யா

சென்னை செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் விஜய் - ரம்யா தம்பதிக்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தம்பதி இருவருக்கும் அவர்களது குலதெய்வம் கோயிலில் திருமணம் முடித்துவிட்டு வீடு திரும்பினர்.

அப்போது கோவிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் தொலைவில் உள்ள வீட்டிற்கு மணமகளை மாடுகள் பூட்டிய ரேக்ளா வண்டியில் மணமகன் அழைத்து வந்தார். இதற்காக மாடுகள் மற்றும் ரேக்ளா வண்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ரேக்ளா வண்டியை மணமகன் ஓட்ட, காளைகள் இரண்டும் சாலையில் சீறிப்பாய்ந்தது.

ரம்யா

மணமகள் ரம்யா, பயத்தில் மணமகனை இறுக பிடித்தபடி அமர்ந்து வந்தார். உறவினர்கள் நண்பர்கள் புடை சூழ அவர் ரேக்ளா வண்டியை ஓட்டி வந்தார். அவர்களை மலர் தூவி உறவினர்கள் வரவேற்பு அளித்தனர்.

ரம்யா

வீட்டுக்கு வந்த மணமக்களை உறவினர்கள் வாழ்த்தினர். பொதுவாக திருமணங்கள் நடந்த முடிந்த பின்பு மணமக்களை ஆடம்பர கார்களில் ஊர்வலமாக அழைத்து வருவது வழக்கம். ஆனால் பழைய பாரம்பரியம் மறக்காமல் மணமகளை ரேக்ளா வண்டியில் அழைத்து வந்த மணமகனை பொதுமக்கள் வியப்பாக பார்த்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ..! 5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிட்ட கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web