தமிழகத்தை நோக்கி நகரும் 'டித்வா'வின் வேகம் குறைந்தது!

 
டித்வா புயல்

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த 'டித்வா' புயலின் வேகம் தற்போது குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, புயலின் நகர்வில் லேசான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நேற்று (நவம்பர் 27) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த 'டித்வா' புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது. இன்று (நவம்பர் 28) காலை நிலவரப்படி, இது இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நீடித்தது. இந்த புயலின் காரணமாகவே தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

புயல் எச்சரிக்கை கூண்டு

வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய தகவலின்படி, புயலின் நகரும் வேகம் குறைந்துள்ளது. முன்னதாக மணிக்கு 4 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த புயல், தற்போது மணிக்கு 3 கிலோ மீட்டராக வேகம் குறைந்துள்ளது.

தற்போது 'டித்வா' புயல் பின்வரும் தொலைவுகளில் நிலைகொண்டுள்ளது: இலங்கை திரிகோண மலையிலிருந்து தெற்கே சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கே 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கே 510 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

புயல்

புயல் மெதுவாக நகர்வதால், தமிழகத்தின் சில கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஐந்து மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் 'சிவப்பு எச்சரிக்கை' விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'டித்வா' புயலானது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை கடலோரப் பகுதிகளைக் கடக்கும் என்றும், பின்னர் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவின் கடலோரப் பகுதிகளுக்கு அருகே வரும் நவம்பர் 30ஆம் தேதி அதிகாலையில் நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!