நட்சத்திர கிரிக்கெட் வீரர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு.. ரசிகர்கள் அதிர்ச்சி... !

 
டேவிட் வார்னர்

 
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சித்திர வீரர்  டேவிட் வார்னர். அதிரடிக்கு பெயர்போன வார்னர்  டி20 வீரராக ஜொலித்தவர்.  இவருடைய வழிகாட்டி வீரேந்திர சேவாக் தான்.வார்னர் “உங்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் டெஸ்ட் கிரிக்கெட். உங்களுக்கு டி20 கிரிக்கெட்டில் 6 ஓவர்கள்தான் பவர்பிளே இருக்கும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அனைத்து ஓவர்களும் உங்களுக்கு பவர்பிளேதான்” என்ற சேவாக்கின் வார்த்தைகளுக்கு பிறகு   ஜாம்பவான் டெஸ்ட் கிரிக்கெட்டராக மாறி அசத்தினார்.   இதுவரை 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் வார்னர், 3 இரட்டை சதம், 26 சதம் மற்றும் 36 அரைசதங்களுடன் 8729 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.

டேவிட் வார்னர்


ஒருநாள் போட்டிகளை  பொறுத்தவரையில், 169 போட்டிகளில்  22 சதங்கள், 33 அரை சதங்களுடன் 6932 ரன்களை குவித்தவர்.   டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2894 ரன்களும், ஐபிஎல் கிரிக்கெட்டில் 6397 ரன்களும் குவித்துள்ளார். இந்நிலையில்தான் நடந்துவரும் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்  பாகிஸ்தானுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டி தான் தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டி என பதிவிட்டுள்ளார்.   


டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்திருக்கும் வார்னர், டி20 போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் கூறியுள்ளார்.  2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியா நிர்வாகத்தின் விருப்பத்திற்கேற்ப  விளையாடுவேன் எனக் கூறியுள்ளார்.  பிபிஎல், ஐபிஎல் தொடர்களில் விளையாடுவேன் என தெரிவித்துள்ள டேவிட் வார்னர்  2024 இறுதியில் நடக்கவிருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா  பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸில் வர்ணனையாளராக இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.  
இதுகுறித்து டேவிட் வார்னர்   “அடுத்தாண்டு சாம்பியன்ஸ் டிராபி வருகிறது.

டேவிட் வார்னர்

 அடுத்த 2 வருடங்களில் நான் நல்ல கிரிக்கெட்டை விளையாடும்பட்சத்தில், ஆஸ்திரேலியா அணிக்கு தேவைப்பட்டால் அத்தொடரில் விளையாடுவதற்கு தயார் .   இந்தியாவுக்கு எதிராக நடைபெற உள்ள பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில், ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக இருக்க விரும்புகிறேன்.  2015 ல் ஒருநாள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் டேவிட் வார்னர். அதேபோல 2021, 2023  டி20 உலகக்கோப்பையில்  தொடர் நாயகனாக ஜொலித்து கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web