பங்குச்சந்தையில் தொடர்ந்து ஏற்றம்... சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் முடிவு!
வங்கி, ஐடி மற்றும் மூலதனப் பொருட்கள் பங்குகளின் விலை உயர்வால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக லாபத்தில் முடிவடைந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று அதிகபட்சமாக 83,598 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் குறைந்தபட்சமாக 82,987.43 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 173.81 புள்ளிகள் உயர்ந்து 83,450.96 புள்ளிகளாக முடிந்தது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 42.65 புள்ளிகள் உயர்ந்து 25,725.40 புள்ளிகளாக நிலைபெற்றது.
இன்றைய வர்த்தகத்தில் ஐடிசி, இன்ஃபோசிஸ், லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன. மறுபுறம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்தன. துறை ரீதியாக வங்கி பங்குகள் 2 சதவீதமும், ஐடி பங்குகள் 1 சதவீதமும் உயர்ந்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளும் சிறிய அளவில் உயர்ந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கையில் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பங்கு விலை தரமிறக்கத்தால் கடுமையாக சரிந்தது. கொச்சின் ஷிப்யார்டு ரூ.5,000 கோடி திட்டத்தை பெற்றதால் அதன் பங்குகள் உயர்ந்தன. மேலும் சிட்டிகுரூப் மற்றும் ஆந்த்ரோபிக் தொடர்பான தகவல்களும் பங்கு நகர்வில் தாக்கம் ஏற்படுத்தின. உலக சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சிறிய அளவில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
