புயல் நெருங்குது... இன்று அவசியமின்றி வெளியே வராதீங்க - அமைச்சர் பேட்டி!
'டிட்வா' புயலின் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிப்பதன் காரணமாக, பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் அவர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய பின்னர், சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள், தற்போது வரை 'டிட்வா' புயல் காரணமாகத் தமிழ்நாட்டில் எந்தவிதமான உயிரிழப்புகளும் இல்லை என்று தெரிவித்தார்.

புயல் நெருங்குவதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். புயல் நெருங்கிக் கொண்டிருப்பதாலும், தொடர்ந்து பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர் பேசுகையில்: தற்போது வரை 13 நிவாரண மையங்களில் 1,058 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புயல் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு வழங்குவதற்காக 5 லட்சம் பேருக்குத் தலா 5 கிலோ அரிசி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமான நிலையத்தில் 155 தமிழர்கள் சிக்கியுள்ளனர் என்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், "மழை குறைந்த பிறகு, விமான நிலையம் திறக்கப்பட்டவுடன், அங்குச் சிக்கியுள்ளவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தொடர்ச்சியாகப் பேசி வருகிறோம்," என்று உறுதி அளித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
