கோர புயல் தாக்குதல்... கதறும் அமெரிக்கா... 2,00,000 பேர் தவிப்பு.. பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு!

 
அமெரிக்கா

அண்மைக்காலமாக அமெரிக்கா இயற்கை பேரிடர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் வருகிற 10ம் தேதி வரை வானிலை ஆய்வு மையம் சார்பில் அங்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த புயல் காற்று வீசியது.

இதனால் ஆர்கன்சாஸ், ஒக்லகாமா, இல்லினாயிஸ், டென்னசி, அயோவா, மிசிசிபி உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. ஏராளமான வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சேதம் அடைந்தன. மேலும் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் அந்நாட்டின் நகரங்கள் இருளில் மூழ்கின. 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து மீட்பு படையினர் அங்கு சாலைகளில் விழுந்த மின் கம்பங்கள் மற்றும் மரங்களை அகற்றி வருகின்றனர். இதில் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் மட்டும் 4 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாகாண கவர்னர் சாண்டர்ஸ் அங்கு அவசர நிலையை அறிவித்தார். மேலும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் கூறினார்.

அமெரிக்காவின் மற்றொரு மாகாணமான இல்லினாய்ஸில் பெல்விடேரில் ஒரு திரையரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது அந்த திரையரங்கில் 200-க்கும் மேற்பட்டோர் சினிமா பார்த்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ள. அதில் ஒருவர் மீது மேற்கூரை விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 28 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த புயல் காற்றால் ஏராளமான மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்காவின் புயல் காற்றுக்கு நாடு முழுவதும் இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web