தள்ளாடும் தமிழகம்... அளவுக்கு அதிகமாக மது குடித்த கல்லூரி மாணவி மரணம்!

தமிழகத்தில் வாரவிடுமுறை நாட்களான சனி ஞாயிறுகளில் பொழுதை போக்க இளைஞர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் விபத்துக்கள் மூலம் உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவது என்பது உடல் நலத்திற்கு தீங்கு என தெரிந்திருந்தும், இளைஞர்கள் அதனை பயன்படுத்துவது தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. அந்த வகையில் அதிக அளவு மது போதை காரணமாக, கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் படூரில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வரும் கல்லூரி மாணவி கவிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது), என்பவர் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனியார் ஏகாட்டூரில் விடுதியில், தங்கி வசித்து வந்தார். வார விடுமுறை நாளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு கவிதா சென்று விட்டு வந்துள்ளார். ஊரிலிருந்து திரும்பி வந்ததிலிருந்து கவிதா கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.
கவிதா தனது தோழியின் அறையில் தங்கி இரவு முழுவதும் மது குடித்துள்ளார்.
போதையில் அளவுக்கு அதிகமான மதுவை அருந்தியதாக தெரிகிறது. இதனால் மது போதை உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல், வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கவிதா அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அவரது உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!