பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவி!! அதிர்ச்சி பிண்ணனி!!

 
வெடிகுண்டு மிரட்டல்

தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அதே போல் வேலூர் மாவட்டம், காட்பாடியில்  தனியார் பி.எம்.டி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இந்தப்பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக  சென்னையில் உள்ள தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம  தொலைபேசி கால் வந்தது. இதனையடுத்து உடனடியாக  சென்னை கட்டுப்பாட்டு அறை காவலர்கள் வெடிகுண்டு மிரட்டல் குறித்து வேலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். 

வெடிகுண்டு மிரட்டல்
இதன் அடிப்படையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் என்னை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  அதில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியானது. குறிப்பிட்ட  எண் வேலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளலார் திரு, ஓல்டு டவுனில் இருந்தது. நேரடியாக அந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அந்த பகுதியில் வசித்து வரும் மாணவி ஒருவர் மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அங்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருவதும், அதில் அடுத்த தேர்வான  புவியியல் தேர்வுக்கு படிக்காத காரணத்தால் தேர்வு பயத்தில் அவருடைய பாட்டியின் செல்போனில்  அவசர எண் 100க்கு அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டார்.

வெடிகுண்டு மிரட்டல்

அதே நேரத்தில் வேலூர் மாவட்ட காவல் குழுவினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் சோதனை செய்து பார்த்ததில் அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளது. இச்சம்பவம்  குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பொய்யாக வதந்தி பரப்பிய மாணவிக்கு அறிவுரையுடன், எச்சரிக்கையும் விடுத்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web