பல்டியடித்தபடியே மேடைக்கு சென்று பட்டம் பெற்ற மாணவி.. வைரலாகும் வீடியோ!

இங்கிலாந்தில் உள்ள ரோஹாம்ப்டன் பல்கலைக்கழத்தில் சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது நடிப்பு மற்றும் நடனப் பயிற்சி துறையில் படிப்பை முடித்தவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் ஒவ்வொருவராக வரிசையில் நின்று பட்டம் பெற்றுசென்றனர்.
அப்போது வரிசையில் பட்டம்பெற காத்து இருந்த சீனாவை சேர்ந்த சென் யினிங் (chen yining) பெயர் வாசிக்கப்பட்டது. தன் பெயர் வாசிக்க கேட்டதும் உற்சாகமடைந்த சீன மாணவி திடீரென பல்டியடித்து கொண்டே பட்டம் பெற வந்தார்.
Chinese student Chen Yining陈奕宁in UK, celebrating graduation in Kung fu style, remembered by teachers and fellow graduates, and goes viral in China’s social media today. pic.twitter.com/zjrbo9V4Se
— China in Pictures (@tongbingxue) March 4, 2023
இதனால் ஆச்சரியம், வியப்பும் அடைந்த பேராசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் சீன பெண்ணின் நடவடிக்கை வெகுவாக ரசித்தனர். இந்நிலையில் இங்கிலாந்தில் பட்டம் பெற பல்டியடித்து கொண்டு வந்த சீன பெண் சென் யினிங்-கின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ தற்போது இணையத்தில் லட்சக்கணக்கானோரை தாண்டி பார்க்கப்பட்டு வருகிறது.
பட்டமளிப்பு நாள் என்பது எந்தவொரு மாணவரின் வாழ்க்கையிலும் ஒரு பெரிய தருணம் ஆகும். அந்த வகையில் இந்த தருணத்தை மறக்கமுடியாத நிகழ்வாக சீன மாணவி மாற்றியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க