செவ்வணக்கம் செலுத்திய மாணவர்கள் அஞ்சலி... தோழர் நல்லகண்ணு படித்த பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பிறந்தவர். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று காலமானார். அவரது மறைவு செய்தி வெளியானதும் ஸ்ரீவைகுண்டம் முழுவதும் சோகத்தில் மூழ்கியது.

தோழர் நல்லகண்ணு ஆரம்பக் கல்வி பயின்ற ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் தொடக்கப் பள்ளியில் நேற்று அவரது மறைவு செய்தி கேட்டு, மாணவர்கள் சோகத்தில் மூழ்கினர். அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வீரவணக்கமும் செலுத்தப்பட்டது.

அவரது மறைவை முன்னிட்டு இன்று பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். அதேபோல் குமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
