பகலில் தகிக்கும் வெயில்.... இரவில் சில்லென்ற சாரல்... ஜூன் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

 
கன மழை


 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் குறைந்திருந்த சில நிலையில் சில இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.  கடந்த சில நாட்களாகவே நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி உட்பட  மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளை தவிர பிற பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வானிலை அடியோடு மாறியுள்ளது.   கோடை காலத்தில் கூட வெயில் குறைவாக இருந்த நிலையில் தற்போது  சென்னை, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. 

5 மாவட்டங்களில் கன மழை
அதே நேரத்தில் இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்து ஓரளவுக்கு வெப்பத்தை தணித்து வருகிறது.  சென்னையில் வெப்பத்தின் அளவு இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது.  இரவில் சென்னையில் சில இடங்களில் மழை பெய்தது. அதிலும், இடி, மின்னல், காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பகல் நேர  வெயிலால்  தகித்த சென்னை  இரவில் பெய்த மழையால் ஜில்லென வானிலை மாறிப்போனது.  
 ஜூன்  28ம்தேதி தமிழகம் முழுவதும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி  தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஜூன் 28ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.  

மழை
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.  மத்திய வங்கக்கடலின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு  65 கி.மீ., வேகத்தில்   வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது