தண்ணீர் பிடிப்பதில் தகராறு.. பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் வெட்டிய சர்வேயர்!

 
சர்வேயர்

நிமிஷ நேர கோபம் தான் வாழ்நாளுக்கும் தீராத காயத்தையும், துன்பத்தையும் கொண்டு சேர்க்கிறது. தண்ணீர் பிடிப்பதில் தகராறு. வார்த்தைகளை இருவரும் கொட்டி தீர்க்க, ஆத்திரத்தில், பக்கத்து வீட்டில் வசிப்பவரை கத்தியால் சர்வேயர் ஒருவர் வெட்டிய சம்பவம் அரக்கோணத்தில் நிகழ்ந்துள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள மேல்பாக்கம் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வருபவர் அருள் (45). இவர் நெமிலி நில அளவையாராக பணியாற்றி வருகிறார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கருணாகரன் (55) இவர்களது குடும்பத்துக்கு இடையே கழிவுநீர் கால்வாய், வீட்டுக்கு வெளியில் வெந்நீர் காய வைப்பது தொடர்பாக முன்விரோத தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

murder

இந்த நிலையில் மீண்டும் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்ட நிலையில் அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மனுவை வாபஸ் பெறுமாறு நில அளவையர் அருள் கருணாகரனை  மிரட்டி உள்ளார். ஆனால் பக்கத்து வீட்டை சேர்ந்த கருணாகரன் புகார் மனுவை வாபஸ் பெற மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் நில அளவையர் அருள், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கருணாகரனை கத்தியால் வெட்டினார். மேலும் கருணாகனின் மனைவி துளசியம்மாளையும்  தாக்கியுள்ளார். இதுதொடர்பாக இரு குடும்பத்தினரும் கட்டை, கத்தி மற்றும் கைகளால் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்து கருணாகரன், அவரது மனைவி துளசியம்மாள் (48) ஆகியோர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Arakkonam Town PS

மேலும் நிலஅளவையர் அருள் மற்றும் அவரது மனைவி ஓவியா உள்ளிட்ட இருவரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  நில அளவையர் அருள் மீது ஏற்கனவே அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் பக்கத்து வீட்டாரிடம் சண்டை போட்டது தொடர்பாக  வழக்குப் பதிவு உள்ள நிலையில் அருள் பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web