தமிழக அரசு நான்கரை ஆண்டுகளாக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை... ஜாக்டோ ஜியோ குழு விஜய் சந்திப்பு!
Jun 13, 2025, 20:05 IST

சென்னை பனையூரில் தவெக தலைவர் விஜய் பரந்தூர் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதில் ஜாக்டோ ஜியோவில் ஒரு பிரிவினரும் சந்தித்தனர். இச்சந்திப்பின்போது தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
விஜய்யுடனான சந்திப்பு நிறைவடைந்த பிறகு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மாயவன், “தமிழக அரசு நான்கரை ஆண்டுகளாக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 8 முறை தமிழ்நாடு முதல்வரை சந்தித்துள்ளோம். அரசை நம்பி ஏமாற்றம் அடைந்துள்ளோம். எங்கள் சங்கத்தின் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம். எங்களின் முழு ஆதரவை தருவோம். முழு அழுத்தத்தை தருவோம்” என விஜய் உறுதி கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!