மத்திய அரசுக்கு ‘செக்’ வைக்கும் தமிழக அரசு... தமிழகத்தின் பதிலடி!

 
தலைமை செயலகம்

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளதை அரசு அதிகாரப்பூர்வமாகப் பேரவையில் உறுதிப்படுத்தியுள்ளது.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் இந்தத் திட்டங்களை நிராகரித்ததற்குக் கூறிய முக்கியக் காரணம். 2017-ம் ஆண்டின் மெட்ரோ ரயில் கொள்கையின்படி, ஒரு நகரத்தில் மெட்ரோ திட்டம் தொடங்க குறைந்தபட்சம் 20 லட்சம் (2 Million) மக்கள்தொகை இருக்க வேண்டும். ஆனால், 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கோவையின் மக்கள் தொகை சுமார் 15.84 லட்சம் என்றும், மதுரையின் மக்கள் தொகை 15 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதாகவும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

மெட்ரோ ரயில்

மத்திய அரசின் இந்த விளக்கத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக அரசு முன்வைக்கும் வாதங்களாக, உத்தரப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில், 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களுக்கு (உதாரணத்திற்கு: வாரணாசி, கான்பூர் போன்றவை) மெட்ரோ திட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

மக்கள்தொகையை மட்டும் பார்க்காமல், அந்த நகரங்களின் பொருளாதார வளர்ச்சி, போக்குவரத்து நெரிசல் மற்றும் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசு வலியுறுத்துகிறது. இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மெட்ரோ

மத்திய அரசு திட்டத்தைத் திருப்பி அனுப்பினாலும், இதற்கான பூர்வாங்கப் பணிகள் (நிலம் கையகப்படுத்துதல், திருத்தப்பட்ட அறிக்கையைத் தயாரித்தல்) நிறுத்தப்படவில்லை. தற்போதைய மக்கள்தொகை மதிப்பீடுகள் மற்றும் கூடுதல் தரவுகளை இணைத்து புதிய திருத்தப்பட்ட ஆய்வு அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) வேகப்படுத்தியுள்ளது. அதே வேளையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்து மகிழ்ச்சியான செய்தியையும் அமைச்சர் பகிர்ந்துள்ளார்: ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தொலைவுக்கான இரண்டாம் கட்டப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி - வடபழனி வழித்தடம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!