போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர்!! பெற்றோர்கள் அதிர்ச்சி!!

 
சேலம்

பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே சில இடங்களில் தவறுகளை செய்து விடுகிறார். இளம் பிள்ளைகள் சுற்றியிருக்கும் சூழ்நிலைகள், ஆசிரியர்களையே ரோல் மாடலாக கொண்டிருப்பர். அவர்களின் எதிர்காலம் குறித்த புரிதலோடு  ஆசிரியர்கள் அவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். இல்லாவிட்டாலும் தவறான முன்னுதாரணமாக இருந்து விடக்கூடாது என்பதே பெற்றோர்களின் கவலை. அந்த வகையில் எடப்பாடியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஒருவர் பணி நேரத்திலேயே மது அருந்தி விட்டு பள்ளிக்கு வருகை தந்தது பெரும் அதிர்ச்சியை பெற்றோர்கள், மாணவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை

சேலம் மாவட்டம் எடப்பாடி   அரசிராமணி குள்ளம்பட்டி அருகேயுள்ள மலை மாரியம்மன் காலனியில்  செயல்பட்டு வருகிறது அரசு தொடக்கப்பள்ளி. இந்த  பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  இந்த பள்ளியில்  வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வரும் அறிவழகன் பணி நேரத்திலேயே மது குடித்துவிட்டு பள்ளிக்கு வருகை தந்தார்.

 அரசு தொடக்கப்பள்ளி
மாணவர்கள் இதனை பெற்றோரிடம் தெரிவிக்கவே பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.  உடனடியாக அப்பள்ளிக்கு வருகை தந்த மாவட்டக்கல்வி அதிகாரிகள் வகுப்பு ஆசிரியர் அறிவழகன்  மது போதையில் இருப்பதை உறுதி செய்தனர். இது குறித்து  துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிவிட்டு அறிவழகனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.  இதற்கு முன்பே  ஆசிரியர் அறிவழகன்   வேறொரு பள்ளியில் பணியாற்றும் போதும் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வருகை புரிந்து  2 முறை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web