அடுத்த 3 நாட்களுக்கு 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்.. பத்திரம் மக்களே!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் அடுத்த 3 நாட்களுக்கு 3 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், வீட்டை விட்டு தனியே கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகளை வெளியே அனுப்பாதீங்க.
ரொம்பவே பத்திரமா இருங்க மக்களே... வெளியே கிளம்பும் போது தண்ணீரோடு கிளம்புங்க.கூடுமானவரை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் வெளியே வெயிலில் சுற்றுவதைத் தவிர்த்துடுங்க. உங்களுடைய பணிகளை அதற்கேற்ப திட்டமிட்டுக்கோங்க.
கடந்த 24 மணி நேரத்தில் தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 15 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் கடனா அணை, 13; திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, 12; கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, 11; திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, 10; கன்னியாகுமரி மாவட்டம் அணைகெடங்கு, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சியில் தலா, 9; கன்னியாகுமரி மாம்பழத்துறையாறு, திருநெல்வேலி மாஞ்சோலை தலா, 8 செ.மீ., மழை பெய்துள்ளது.
மன்னார்வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.அதனால் மார்ச் 9ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 3 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் நிலவும் என கூறப்பட்டுள்ளது. வெயில் நேரத்தில் பாதுகாப்பாக இருங்க. கூடுமானவரை மாலை 4 மணி வரை அவசியமில்லாமல் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்கப் பாருங்க.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!