மகா சிவராத்திரியில் அதிர்ச்சி... கோவிலில் பெண்ணை கன்னத்தில் அறைந்த கோவில் பூசாரி!

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த கோவில் வாசிஸ்வரர் சிவன் கோவில். நேற்று இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அதிக அளவில் ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கோவில் வளாகத்தில் சிவ தொண்டாற்றும் பக்தர்கள் கைலாய வாத்தியங்கள் வாசித்து கொண்டிருந்தனர்.
அப்போது கோவிலில் இருந்த பூசாரி சிவா மற்றும் அவரது மகன் இருவரும் கைலாய வாத்தியம் வாசிக்கும் திருவள்ளூரை சேர்ந்த அமலாம்மாளை சிவனடியாரை ஆலயத்தில் இருந்து வெளியே போகச் சொன்னதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களை மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சிவ பக்தர்கள் மற்றும் கைலாய வாத்தியம் வாசிக்கும் சிவனடியார்கள் பூசாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
திடீரென பூசாரி சிவா வாத்தியம் வாசிக்கும் ஒரு பெண்மணியை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பக்தர்கள் கேள்விக்கு பயந்து, சன்னதிக்குள் சென்று பூசாரி கதவை பூட்டிக்கொண்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்மணி, பூசாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!