தொடரும் பதற்ற நிலை... இஸ்ரேல் உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் ஈரானில் கைது!

இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக ஈரானின் கோம் மாகாண போலீசார் இன்று தகவல் வெளியிட்டுள்ளனர். இது குறித்து போலீசார் சியோனிச ஆட்சியின் உளவு சேவைகளுடன் தொடர்புடையவர்கள், பொதுமக்களின் கருத்தை தொந்தரவு செய்தவர்கள் மற்றும் குற்றவியல் ஆட்சியை ஆதரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 22 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகவும், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரை ஈரானிய போலீசார் கைது செய்ததாக அறிவித்தனர். .
உளவு பார்த்ததற்காக ஒரு ஐரோப்பிய நாட்டவரும் கைது செய்யப்பட்டதாக ஈரான் காவல் படையுடன் தொடர்புடைய அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தஸ்னிம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை. நாடு முழுவதும் குறைந்தது 223 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக நார்வேயை தளமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பான ஈரான் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!