பகீர்... கடையில் நின்றிருந்த பைக்கை தள்ளிச் சென்ற திருடன்!
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நேருநகரை சேர்ந்த சந்தோஷ் (25), 19ஆம் தேதி இரவு சத்தியமங்கலம்–கோவை தேசிய நெடுஞ்சாலையோர இணைப்பு சாலையில் பைக்கை நிறுத்தி கடைக்குள் சென்றார். சில நிமிடங்களில் வெளியே வந்தபோது பைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் உடனே புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் அருகிலிருந்த கடையின் முன் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சாலையில் நடந்து வந்த ஒருவர் பைக்கை சுற்றி நோட்டமிட்டு பார்த்துவிட்டு, எளிதாக அதில் அமர்ந்து, பின்னர் தள்ளிச் செல்லும் காட்சி தெளிவாக பதிவானது. மேலும், போலீஸ் ஸ்டேஷன் அருகில் அவருடைய கூட்டாளி மற்றொரு பைக்கில் அமர்ந்தபடி காலால் தள்ளி கொண்டு திருட்டு பைக்கை முன்னோக்கி ஓட்டிச் செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், இதில் இடம்பெற்ற இரு நபர்களையும் அடையாளம் கண்டு பிடிக்க தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
