ஆரூரா... தியாகேசா... விண்ணைப் பிளந்த கரகோஷத்துடன் உலகப்பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம்!

 
திருவாரூர்

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் நடைபெறும் .அந்த வகையில் நடப்பாண்டுக்கான தேரோட்டம் இன்று நடைபெற்றது.  தேரை லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ஆரூரா, தியாகேசா என பக்தர்கள் பரவசத்தில் முழக்கமிட்டனர். 

திருவாரூர்

திருவாரூர் தியாகராஜ சுவாமி பங்குனி உத்திரதேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று அதிகாலை விநாயகர் தேரும், சுப்பிரமணியர் தேரும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது இதையடுத்து காலை ஆழித்தோரேட்டம் தொடங்கியது. இந்த தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இவர்களுக்காக 2000 போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.  96 அடி உயரம், 350 டன் எடை கொண்ட ஆழித்தேரை ஆரூரா தியாகேசா என பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். இந்த ஆழித்தேரோட்டத்தால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு  இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

திருவாரூர்

இந்த கோயிலின் தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராகும். இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் உள்ளிட்ட வசதிகள் கொண்ட பாதுகாப்பான தேர் இதுவாகும். இந்த வசதிகளை திருச்சி பெல் நிறுவனம் செய்து கொடுத்துள்ளது. இந்த தேரின் முன்புறம் வடங்களை பக்தர்கள் இழுப்பார்கள். பின்புறமுள்ள இரு சக்கரங்களையும் இரு புல்டோசர்கள் தள்ளும்.  2010 ம் ஆண்டு தேர் பழுதடைந்ததால் தேரோட்டம் நடைபெறவில்லை. சென்னை வள்ளுவர் கோட்டம் திருவாரூர் தேரின் மாதிரியை கொண்டு வடிவமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web