வீடு புகுந்து மனைவி கண்முன்னே ரவுடி வெட்டிக் கொலை.. 15 பேர் கும்பலால் அலறிய மக்கள்!

 
யோகேஸ்வரன்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பொத்துாரை சேர்ந்தவர் யோகேஸ்வரன்(32). இவர் அப்பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். யோகேஸ்வரன் மீது, கொலை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் அவர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அவரது மனைவியும் அப்போது வீட்டில் இருந்துள்ளார். 

இந்த நிலையில், அவரது வீட்டில் 15 பேர் கொண்ட கும்பல் திடீரென புகுந்தது. அங்கு தூங்கிக்கொண்டு இருந்த யோகேஸ்வரனை சரமாரியாக வெட்டியது. அவர் சுதாகரித்து எழுந்திருப்பதற்குள் அந்த கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர்.

யோகேஸ்வரன்

இதனை பார்த்த யோகேஸ்வரன் மனைவி கதறி துடித்த நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அந்த கும்பல் அவர்கள் வருவதை பார்த்து அங்கு இருந்து தப்பி சென்றனர். தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக, பழிக்குப்பழி தீர்க்கும் நோக்கத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த 2016ஆம் ஆண்டு யோகேஸ்வரன் செய்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

யோகேஸ்வரன்

ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீடு புகுந்து 15 பேர் கொண்ட கும்பல் யோகேஸ்வரனை சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web