மொத்தமா டெபாசிட் காலி... 3 ஓட்டு வாங்கிய திமுக, 2 ஓட்டு வாங்கிய அதிமுக... கேரள தேர்தலில் அதிர்ச்சி!

 
இபிஎஸ் எடப்பாடி ஸ்டாலின்

தமிழகத்தில் ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருக்கும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே அண்டை மாநிலமான கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் இந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்ததோடு மட்டுமல்லாமல், சில வார்டுகளில் ஒற்றை இலக்க வாக்குகளை மட்டுமே பெற்று அதிர்ச்சி அளித்துள்ளனர்.

கேரள உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிட்ட பல வார்டுகளில் மிகவும் குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளனர். ஒற்றை இலக்க வாக்குகளைப் பெற்ற வார்டுகள் பின்வருமாறு: இடுக்கி மாவட்டம், சின்னகானல் கிராமப் பஞ்சாயத்து வார்டு 6-ல் 3 ஓட்டுகள். கொல்லம் மாவட்டம், புனலூர் நகராட்சி, முசாவரி வார்டில் 8 ஓட்டுகள்.

திமுக

இவற்றைத் தவிர, சின்னகானல் வார்டு 10-ல் 19 ஓட்டுகள், தேவிகுளம் வார்டு 10-ல் 22 ஓட்டுகள், புனலூரில் உள்ள பேப்பர் மில் வார்டில் 29 ஓட்டுகள், கரக்காடு வார்டில் 21 ஓட்டுகள், ஹை ஸ்கூல் வார்டில் 20 ஓட்டுகள் மற்றும் தாமரபள்ளி வார்டில் 10 ஓட்டுகள் எனப் பல இடங்களில் மிகக் குறைந்த வாக்குகளையே தி.மு.க. பெற்றது.

அதிமுக வேட்பாளர்களும் அதே போன்ற தோல்வியைச் சந்தித்துள்ளனர். குறிப்பாகச் சில வார்டுகளில் ஒற்றை இலக்க வாக்குகளைப் பெற்றுள்ளனர்: மூணார் கிராமப் பஞ்சாயத்து வார்டு 18-ல் 2 ஓட்டுகள். வட்டவடா கிராமப் பஞ்சாயத்து வார்டு 4-ல் 4 ஓட்டுகள். சின்னகானல் கிராமப் பஞ்சாயத்து வார்டு 11-ல் 7 ஓட்டுகள். சின்னகானல் கிராமப் பஞ்சாயத்து வார்டு 4-ல் 3 ஓட்டுகள். அ.தி.மு.க., இடுக்கி மாவட்டப் பஞ்சாயத்து வார்டுகளில் சற்று அதிகபட்சமாக 774 மற்றும் 623 வாக்குகளைப் பெற்றிருந்தாலும், பல வார்டுகளில் 119, 51, 16, 18 என மிகவும் குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளது.

'பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு'... மே 23ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!

இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் கேரள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை முழுமையாக இழந்தது உறுதியாகியுள்ளது. மொத்த வாக்குகளின் அடிப்படையில் ஒப்பிடும் போது திமுக.வை விட அதிமுக சற்று அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இருப்பினும், அதிமுக, திமுகவை விடக் கூடுதல் இடங்களில் போட்டியிட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் கேரளாவில் ஏற்பட்ட படுதோல்வி அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!