தொடரும் சோகம்!! 10ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை!! கதறித்துடித்த பெற்றோர்!!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 94% பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்வில் தோல்வி அடைந்ததால் தமிழகம் முழுவதும் 5 மாணவ, மாணவிகள் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் 10 வகுப்பு மாணவர் ஒரு தூக்கு போட்டு தற்கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் பழைய ஆர்.டி.ஓ. அலுவலக பகுதியில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன். இவர் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அன்புச்செல்வி. இவர்களுக்கு 15 வயதில் விக்னேஸ்வரன் என்ற ஒரு மகனும், 13 வயதில் பிரியதர்ஷினி என்ற ஒரு மகளும் இருந்தனர். இதில் விக்னேஸ்வரன் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதியுள்ளார். தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில் விக்னேஸ்வரன் ஒழுங்காக படிக்கவில்லை எனவும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஒழுங்காக எழுதவில்லை என பெற்றோர் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் விக்னேஸ்வரன் கடும் மன உளைச்சலில் இருந்தார். இதனையடுத்து பரமத்திவேலூர் அருகே படமுடிபாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று காலை விக்னேஸ்வரன் திடீரென காணவில்லை. அவரது பாட்டி அக்கம்பக்கத்தினர் அனைவரையும் விசாரித்தார். வீட்டில் உள்ள மற்றொரு அறைக்கு சென்று பார்த்தபோது, விக்னேஸ்வரன் சேலையால் தூக்குப்போட்டு கொண்டதை கண்ட பாட்டி கதறி அழுதார். நாமக்கல்லில் உள்ள தனது மகள் அன்புச்செல்வி மற்றும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!