தொடரும் சோகம்!! ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தமிழக வீரர் பலி!!

 
ஜெயந்த்

பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர்  நேற்று காலை அருணாசலபிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டம், சாங்க் கிராமத்தில் இருந்து புறப்பட்டது. ஒரு ராணுவ மேஜர் மற்றும் லெப்டினன்ட் அதிகாரி இருவரும் அந்த ஹெலிகாப்டரில் அசாமின் மிஸ்ஸாமாரி பகுதிக்கு  அவர்களே ஹெலிகாப்டரை இயக்கி சென்றனர் . சரியாக காலை 9 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் 15 நிமிடங்களில்  9.15 மணிக்கு கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை இழந்தது.

ஹெலிகாப்டர் விபத்து

உடனடியாக தகவல் அறிய முயன்ற போது  மேற்கு பூம்டிலா மாவட்டம் மன்டலா பகுதியில் பறந்தபோது விபத்துக்குள்ளானது தெரியவந்தது.  அந்த பகுதியில் வசித்து வரும் கிராமத்தினர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான  தகவலை காவல்துறையிடம்  தெரிவித்தனர். விழுந்து கிடந்த இடத்திற்கு சென்று பார்த்த போது  ஹெலிகாப்டர் எரிந்து புகைந்து கொண்டிருந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 2 ராணுவ அதிகாரிகளும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஜெயந்த்

அவர்கள்  லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி மற்றும் அவரது உதவி விமானி மேஜர் ஜெயந்த். இதில் உதவி விமானி ஜெயந்த்  தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து மேஜர் ஜெயந்தின் உடல் இன்று மாலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web