தொடரும் சோகம்.. 11ம் வகுப்பு முதல் தேர்வை 12,660 பேர் எழுதவில்லை..

 
தேர்வு

தமிழகத்தில் பொதுத்தேர்வை அதிகளவிலான மாணவ, மாணவிகள் ஒவ்வொரு வருடமும் புறக்கணிக்கிறார்கள். இவர்களது கற்றல் இடைநிறுத்தல் குறித்து அரசு அதிகளவில் அக்கறை செலுத்த வேண்டிய நேரம் இது. அதற்கான காரணங்களைக் கண்டறிந்து செயலாற்ற வேண்டும். 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 50,000க்கும் அதிகமானோர் எழுதாத நிலையில், நேற்று நடைப்பெற்ற 11ம் வகுப்பு முதல் தேர்வான தமிழ் தாள் தேர்வுக்கு 12,660 பேர் எழுத வரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

11ம் வகுப்பு தேர்வுகள் நேற்று தொடங்கி வரும் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாடும் முழுவதும் நடத்தப்படும் இந்தப் பொதுத் தேர்வில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 908 மாணவர்களும், 4 லட்சத்து 12 ஆயிரத்து 779 மாணவிகளும் 1 முன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் தேர்வு எழுதவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

ஊரகத் திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு

தனித் தேர்வர்களை பொறுத்த வரை 2 ஆயிரத்து 356 மாணவர்களும், 2 ஆயிரத்து 979 பெண்களும், 3 மூன்றாம் பாலினத்தவர் என 5 ஆயிரத்து 338 பேர் எழுத உள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்களை பொறுத்த வரை 3 ஆயிரத்து 228 மாணவர்களும், 2 ஆயிரத்து 607 பெண்களும் என 5 ஆயிரத்து 835 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். சிறைவாசிகளில் 125 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

exam

தேர்வர்களுக்காக 3 ஆயிரத்து 224 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்களுக்கு 132 தேர்வு மையங்களும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் நேற்று  தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தாள் தேர்வை 12,660 பேர் எழுதவில்லை என பள்ளக்கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாக தமிழகத்தில் 12ம் வகுப்பு தமிழ் மொழிப்பாடத் தேர்வை 50,674 மாணவர்கள் எழுதவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web