தொடரும் சோகம்... பகீர் சிசிடிவி காட்சிகள்... கிரிக்கெட் விளையாடிய போது இளைஞர் மயங்கி சரிந்து பலி!

 
தொடரும் சோகம்...  பகீர் சிசிடிவி காட்சிகள்... கிரிக்கெட் விளையாடிய போது இளைஞர் மயங்கி சரிந்து பலி! 

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு உலகம்முழுவதும் இளவயது மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் வசித்து வந்தவர்  பிரனீத். இவர் தனியார் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.  இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மேட்சல் ராம் பள்ளியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக தனது நண்பர்களுடன் சென்றிருந்தார்.  

அப்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென அவர் சரிந்து விழுந்தார்.இதையடுத்து அங்கிருந்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அத்துடன்  மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது  தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?