தொடரும் சோகம்... காவலர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை!

தமிழகத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் வசித்து வருபவர் 35 வயது கண்ணன் . இவர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கண்ணன் கடந்த சில மாதங்களாகப் பணிக்குச் செல்லாமல் மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.போலீஸார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்பப் பிரச்சினையால் கண்ணன் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!