தொடரும் சோகம்... சுற்றுலா சென்ற பள்ளி மாணவன் மயங்கி சரிந்து பலி!

 
மருத்துவமனை

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளவயது மாரடைப்பு மரணங்கள் தொடர்கதையாகி வருகின்றன. நடனம், விளையாட்டு, உடற்பயிற்சிகளில்   ஈடுபட்டு வருபவர்கள்  திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன.  சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்ற திருமண விழாவில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த இளம்பெண் , குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட மணமகன்,  தெலங்கானாவில் பள்ளிக்கூடத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்த 10ம் மாணவி  அந்த வரிசையில் தற்போது மகாராஷ்டிராவில் சுற்றுலா சென்றிருந்த14 வயது பள்ளி மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

மரணம் மாரடைப்பு நெஞ்சுவலி
மகாராஷ்டிராவின் கன்சோலியில் உள்ள நவி மும்பை மாநகராட்சி நடத்தும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தவர் ஆயுஷ் தர்மேந்திர சிங் . இவருக்கு வயது 14.  இவர், பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி சுற்றுலாவிற்கு மற்ற மாணவர்களுடன் ராய்காட் மாவட்டம் கோபோலியில் உள்ள இமாஜிகா தீம் பார்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பயணத்தில்  ​​அசௌகரியமாக உணர்ந்ததால்  அப்படியே பெஞ்சில் அமர்ந்துள்ளார். 

மாரடைப்பு

பின்னர் திடீரென தரையில் சரிந்து விழுந்தார்.   மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன், பூங்காவிற்குள் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு மாணவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர்.   அரசு மருத்துவ அதிகாரி முன்னிலையில் அவருக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து  காவல் நிலையத்தில் விபத்து மரணம் குறித்து   வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web