தொடரும் சோகம்... தனிப்படை காவலர் மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் !

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சித்திரங்குடி ஊராட்சி இடைச்சியூரணி கிராமத்தில் ஜூன் 14ம் தேதி பேராயிர மூர்த்தி அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்றது. அங்கு பேரையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் சித்திரங்குடியில் உள்ள பெட்டிக்கடையில் 2 நபர்கள் சண்டையிட்டுக்கொள்வதாக தனிப்பிரிவு காவலர் லிங்குசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜசேகர் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் மது அருந்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தனிப்பிரிவு காவலர் லிங்கசாமி தட்டிக் கேட்டார். மாற்றுத்திறனாளி தங்கவேல் அவரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் கம்பியால் தனிப்பிரிவு காவலர் தலையில் தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தனிப்பிரிவு காவலர் திருப்பி தாக்கும் பொழுது மாற்றுத்திறனாளி தங்கவேலுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காயமடைந்த தனிப்பிரிவு காவலர் லிங்கசாமி பரமக்குடி அரசு மருத்துவமனையிலும், மாற்றுத்திறனாளி தங்கவேல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இருவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் தனிப்பிரிவு காவலர் லிங்கசாமி மீதும் மாற்றுத்திறனாளி தங்கவேல் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது இந்த பிரச்சனையில் தனிப்பிரிவு காவலர் லிங்குசாமியை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!