தொடரும் சோகம்.. சிகிச்சை பெற்று வந்த பெண் யானை உயிரிழப்பு!

 
யானை

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஆதிமாதையனூர், முத்துக்கல்லார் உள்ளிட்ட கிராமங்களில் காட்டு யானை ஒன்று வாயில் காயங்களுடன் சுற்றித்திரிந்தது. மேலும் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். எனவே, யானையை பிடிக்க வேண்டும் அல்லது காட்டுப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.

யானை

இந்நிலையில் டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டது. காயத்துடன் சுற்றித்திரிந்த யானை மயக்க ஊசி செலுத்தி, கும்கி யானையின் உதவியுடன் பிடிக்கப்பட்டது. பின்னர் காயமடைந்த யானையை லாரியில் ஏற்றபட்டு டாப்சிலிப் அருகேயுள்ள வரகழியாறு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு யானையை மரக்கூண்டில் அடைத்து மருத்துவக்குழுவினர் கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டதால் உணவு எடுத்துக்கொள்ளப்பட முடியாத நிலையில் அதற்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டடது. எனினும், அதன் உடல் நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வந்தது. அதனால், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு யானை பரிதாபமாக உயிரிழந்தது.   

யானை

அடுத்தடுத்து காட்டு யானைகள் உயிரிழந்து வரும் நிலையில், மேலும் ஒரு யானை உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தீர்வுகாணும் வகையில் வனத்துறை, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web