விளையாட்டுப் பொருள் எமனாக மாறிய சோகம்... பலூனை விழுங்கிய 7 மாதக் குழந்தை உயிரிழப்பு!

 
பலூன்

திருண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தரவா நாயகன் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஏழுமலை - சந்தியா தம்பதியினர் செங்கல் சூளைத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும், 7 மாதத்தில் ரேணுகா என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று மாலை வீட்டில் சுத்தம் செய்யும் பணியில் தாய் சந்தியா ஈடுபட்டிருந்தார். அப்போது குழந்தைகள் விளையாடுவதற்காகத் தந்தை ஏழுமலை பலூன்களை வாங்கித் தந்துள்ளார். மூத்த மகளுடன் விளையாடிக்கொண்டிருந்த 7 மாதக் குழந்தை ரேணுகா, எதிர்பாராத விதமாகத் தரையில் கிடந்த ஒரு பலூனை எடுத்து வாயில் போட்டுள்ளது. அந்தப் பலூன் குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்டதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை மயங்கி விழுந்தது.

குழந்தை உயிரிழப்பு

பதறியடித்துக் கொண்டு குழந்தையைச் செங்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யாமல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப் பெற்றோர் முயன்றனர். ஆனால், "சந்தேகத்திற்குரிய அல்லது விபத்து மரணங்களில் முறையான காரணம் கண்டறியப்பட வேண்டும்" என்ற விதிப்படி மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் காவல்துறையினர் வந்து பெற்றோரைச் சமாதானப்படுத்தி, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!