மூட்டை, மூட்டையாக அரிசி, பருப்பு, உணவு தானியங்களை குப்பையில் வீசிச் சென்ற சோகம்...!!

 
அரிசி மூட்டைகள்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் தென் பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்களை சந்தித்துள்ளன. குறிப்பாக தூத்துக்குடியில் மழை நின்று 5 நாட்கள் ஆகியும் இன்னும் மீட்பு பணிகள் தொடர்கின்றன. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அரிசி மூட்டைகள்

தன்னார்வலர்கள், அரசு அலுவலர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கிய  காமராஜர் தினசரி காய்கறி  சந்தை கனமழை மற்றும் வெள்ளத்தில் முழுவதுமாக  மூழ்கியது. நேற்று மாலை முதல் 4 மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  நேற்றைய அளவைவிட  4 அடி தண்ணீர் குறைந்தபோதிலும் இன்னும்   முழங்கால் அளவு தண்ணீர் உள்ளது. இவை  இன்று மாலைக்குள் அகற்றப்படும் என வியாபாரிகள்  தெரிவித்தனர்.

தூத்துக்குடி

தண்ணீரில் மூழ்கி அழுகிய காய்கறி மூட்டைகளை வெளியேற்றும் பணியிலும் எஞ்சிய பொருட்களை மீட்கும் பணியிலும் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.   அதே போல் ஏரல் மார்க்கெட் பகுதி முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியதால், 500க்கும் மேற்பட்ட சிறு குறு கடைகளுக்குள் வெள்ளம் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தில் மூழ்கிய அரிசி, பருப்பு, கோதுமை, தானியங்கள், எண்ணெய் உட்பட  பல பொருட்களை உபயோகிக்க முடியாது இதனால் அவைகளை   வியாபாரிகள் சாலையில் வீசிச் சென்றுள்ளனர்  

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web