அதிர்ச்சி!! மஞ்சள் வாசம் கூட மறையலையே!! திருமணமாகி 2வது வாரத்திலேயே புதுமணப்பெண் மரணம் !!

 
ராகப்பிரியா

கரூர் தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகப்பிரியா (27), பொரணியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 2 வாரங்களுக்கு முன்புதான் சுதர்சன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சில நாட்கள் சந்தோஷமாக இருந்த நிலையில், அதற்குள்ளேயே சுதர்சனின் கள்ளக்காதல் விவகாரம் மனைவி ராகப்பிரியாவுக்கு தெரியவந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதை பற்றி கணவரிடமே கேட்டுள்ளார். அதுவே இந்த புதுமண தம்பதிக்குள் தகராறாக வெடித்துள்ளது. கணவன் தகராறு செய்ததால் தினமும் அழுதுகொண்டே இருந்த ராகப்பிரியா, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவல் அறிந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராகப்பிரியா

கல்யாணம் ஆகி 2 வாரத்திலேயே இளம்பெண் இறந்தது, குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. இதனிடையே, ராகப்பிரியா தற்கொலைக்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், தன்னுடைய தற்கொலைக்கு கணவர்தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அந்த கடிதத்தில், எனக்கு பிப்ரவரி 23ஆம் தேதிதான் கல்யாணம் ஆனது. என் புருஷனுடன் இல்லற வாழ்வில் 2 நாள்தான் மட்டும்தான் சந்தோஷமாக இருந்தேன். ஆனால், அவருக்கு என்னை பிடிக்கவேயில்லை. என் மேல் துளிகூட விருப்பம் இல்லை என்பதை 13 நாட்களில் புரிந்துகொண்டேன். என்னை மனதளவில் மிகவும் பாதிப்படைய செய்தான் சுதர்சன். என் குடும்பத்துக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டேன். என் மரணத்துக்கு காரணம் ரம்யாவும், சுதர்சனும் தான், என்று அதில் கைப்பட எழுதியுள்ளார்.

ராகப்பிரியா

இதைத்தவிர, ராகப்பிரியா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. திருமணமாகி 2 வாரமே ஆகியுள்ளதால், இந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web