உஷார்...! திருடுறதுல தனி ஸ்டைல்.. போலீசிடம் சிக்கிய கில்லாடி இரட்டை ராணிகள்!

 
dsf

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த நாகப்பன் என்பவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி தனது மனைவி,  குழந்தைகளுடன் புதுச்சேரிக்கு சென்றிருந்தார். அங்குள்ள நேரு வீதியில் நகைக்கடை ஒன்றில் 3 சவரன் நகை வாங்கியுள்ளார்.  பின்னர் அங்கிருந்து புதிய பேருந்து நிலையம் செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் சென்றுள்ளனர். 

அதே வாகனத்தில் டிப்டாப் உடை அணிந்த 2 பெண்கள் ஏறினர். அண்ணா சிலை அருகே வந்தபோது அதில் இருந்த 2 பெண்கள் அவசரமாக இறங்கி ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த நாகப்பன் தனது மனைவியின் கையில் இருந்த கட்டை பையை வாங்கி பார்த்துள்ளார். அப்போது அதில் வைத்திருந்த 3 பவுன் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சோலையம்மாள்

விசாரணை நடத்திய போலீசார், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பார்வையிட்டனர். அவர்கள் 2 பேரின் புகைப்படங்களை வைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த சோலையம்மாள்(30), காவேரி(39) என்பது தெரிய வந்தது.

சில வாரங்கள் அவர்களை கண்டுபிடிக்கமுடியாத நிலையில், அதன்பின்னர் அவர்கள் 2 பேரும் மற்றொரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

சோலையம்மாள்

அப்போது பல இடங்களில் அவர்கள் இதுபோன்று திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலி, ரூ.72,500 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் திருடுவதற்கென தனி பாணி வைத்துள்ளனர். ஓடும் பேருந்து மற்றும் ஆட்டோக்களில் செல்பவர்களை மட்டும் குறி வைத்து திருடுவார்களாம். 

 லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க