பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமையிலும் மத்திய பட்ஜெட்… !

 
பட்ஜெட்
 

 

கடந்த 2017-ம் ஆண்டு முதல் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், அன்றே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

பட்ஜெட்

இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28-ந்தேதி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. அதனை தொடர்ந்து ஜனவரி 29-ந்தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நிர்மலா பட்ஜெட்

இதனை தொடர்ந்து, பிப்ரவரி 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிந்ததும் பிப்ரவரி 13-ந்தேதி நாடாளுமன்றம் இடைவேளைக்கு செல்லும். பின்னர் மார்ச் 9-ந்தேதி மீண்டும் கூடி, ஏப்ரல் 2-ந்தேதி இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!